×

பட்டாசு தீக்காய சிகிச்சை அளிக்ககோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு

 

கோவை, நவ. 11: கோவை அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்தினால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற தீக்காயங்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய வார்டு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் கூடிய தீக்காய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், \\”பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பட்டாசு விபத்தினால் ஏற்படும் தீகாயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள், உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தவிர, பிரத்யேக மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு 24 மணி நேரமும் செயல்படும். தீக்காயம் ஏற்படுபவர்கள் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

The post பட்டாசு தீக்காய சிகிச்சை அளிக்ககோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Government ,Hospital ,Diwali ,Coimbatore Government Hospital ,Dinakaran ,
× RELATED பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய...